செய்திகள் :

ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா? மே 1 முதல் புதிய கட்டணம்!

post image

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் மாற்றம் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

வழக்கமாக ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் நகரமாக இருந்தால் கட்டணமின்றி மூன்று முறையும், ஊரகப் பகுதியாக இருந்தால் கட்டணமின்றி ஐந்து முறையும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

ஒருவேளை, ஒரு மாதத்துக்கான பணப்பரிவர்த்தனைக்கான அளவைக் கடந்துவிட்டால் அதன்பிறகு ஒவ்வொரு முறை ஏடிஎம் பயன்படுத்தும்போதும் வசூலிக்கப்படும் தொகை ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன் வரிகளும் அடங்கும். இதற்கு முன்பு வரை இந்தக் கட்டணம் ரூ.21 ஆக இருந்தது. இது பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் சேவைக்குப் பொருந்தாது.

ஏற்கனவே, இது தொடர்பாக எச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கிவிட்டன.

அதாவது, ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.21+வரிக்கு பதிலாக தற்போது ரூ.23+ வரி என உயர்த்தப்பட்டுள்ளது. சில வங்கிகள், பணப்பரிவர்த்தனைக்கு மட்டுமே கட்டணம் வசூலிப்பதாகவும், வங்கி இருப்பு நிலவரங்களைப் பார்ப்பதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் சில வங்கிகள், பணப்பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளன.

சில வங்கிகள், பணப்பரிவர்த்தனைக்கு ரூ.23ம், வங்கி இருப்புகளை அறிந்துகொள்ள மட்டும் ஏடிஎம் சேவையை பயன்படுத்தினால் ரூ.11 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஏடிஎம்களில் பணம் எடுக்கப்படும் அளவு குறைந்து வருவதை ஆர்பிஐ தரவு காட்டுகிறது. அதாவது, கடந்த 2023 ஜனவரியில் ஏடிஎம் மூலம் 57 கோடி முறை பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்றும், இது 2024 ஜனவரியில் 52.72 கோடி முறையாகவும், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 48.83 கோடி முறையாகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண மாற்றம், வங்கிகள் தங்களது ஏடிஎம் மையங்களின் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.85.25-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் மீட்சி மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 85.25 ஆக முடிந்தது.... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!

மும்பை: புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஓரளவு உயர்ந்தன. இருப்பி... மேலும் பார்க்க

ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!!

பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று(ஏப். 29) ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,396.92 என்ற புள்ளிகளில் தொடங்கிய... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!

புதுதில்லி: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், 69 சதவிகிதம் அதிகரித்து ரூ.698 கோடி ரூபாயாக உள்ளது.2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால... மேலும் பார்க்க

மே 2-ல் அறிமுகமாகிறது ஏசஸ் நிறுவனத்தின் இரு புதிய லேப்டாப்!

ஏசஸ் நிறுவனம் இரண்டு புதிய மடிக்கணினிகளை (லேப்டாப்) மே 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் லேப்டாப் ஜி-16 (Asus ROG Strix G16), ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் லேப்டாப் ஜி-18 ஆ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்தும், கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் ஏற்றமான போக்கு ஆகியவற்றால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ... மேலும் பார்க்க