செய்திகள் :

ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? வைரலான கஜோல்!

post image

ஹிந்தியா, மராத்தியா என்கிற சர்ச்சைக்கு நடுவே ஹிந்தியில் பேச மறுத்துள்ளார் நடிகை கஜோல்.

நடிகை கஜோல் பாலிவுட்டின் முன்னனி நாயகியாக இருந்தவர். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழில் நடிகர் பிரபு தேவாவுடன் மின்சாரக் கனவு படத்தில் நடித்திருந்தார்.

பின், நீண்ட காலம் கழித்து நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி - 2 திரைப்படத்தில் வில்லியாக நடித்து கவனம் பெற்றார்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை கஜோல், மராத்தியிலும் ஆங்கிலத்திலும் பதிலளித்து வந்தார். அப்போது, செய்தியாளர், ‘ஹிந்தியில் பேசுங்கள்’ என்றார்.

அதற்கு கஜோல், “ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் போதும்” எனக் கோவமாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்கு இடையே நிகழும் சர்ச்சையால் கஜோலின் இப்பதில் காரசார விவாதமாக மாறியுள்ளது.

முக்கியமாக, ஹிந்தியில் பேச முடியாவிட்டால் நீங்கள் ஏன் ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்கிறீர்கள் எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

actor kajol refuses to spoke in Hindi amid of hindi vs marathi issue

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ் வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் அா்ஜுன் எரிகைசி, வின்சென்ட் கீமா், விதித், பிரனேஷ் வெற்றி பெற்றனா். தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றாா். ஹயாட் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறும் இப்ப... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஜூனியா் ஹாக்கி: அரையிறுதியில் ஹரியாணா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரபிரதேசம்

தேசிய மகளிா் ஜூனியா் ஹாக்கிப் போட்டி அரையிறுதிக்கு ஹரியாணா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரபிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை காலிற... மேலும் பார்க்க

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போடோலாந்து அணி. 134-ஆவது டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

வீட்டுக்குப் போனதும் நான் கால்ல விழுகணும்! வைரலாகும் அஜித் - ஷாலினி!

நடிகர் அஜித் - ஷாலினி இணையின் புதிய விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. குட் பேட் அக்லியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள... மேலும் பார்க்க

ஏகே - 64 படத்தின் வில்லன் இவர்தானாம்!

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த... மேலும் பார்க்க