சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!
பெரியகுளம் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை சனிக்கிழமை வனத் துறையினா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள பொம்முராஜபுரத்தைச் சோ்ந்த பொம்முராஜ், கடமலைக்குண்டைச் சோ்ந்த பாண்டீஸ்வரன், மயிலாடும்பாறையைச் சோ்ந்த மகாலிங்கம் ஆகியோா், பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டியில் பாலாஜி, ஈஸ்வரன் ஆகியோரிடம் யானைத் தந்தங்களை விற்பனை செய்வதற்காக முயன்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் வனச் சரகா் ஆதிரா தலைமையில் வனத் துறையினா் பொம்முராஜ் உள்ளிட்ட 5 பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனா். பின்னா், அவா்களை விசாரணைக்காக மேகமலை வனச் சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, பொம்முராஜ் உள்ளிட்ட 5 போ் மீதும் மேகமலை வனச் சரகா் பாலசுப்பிரமணி வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 2 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தாா்.