குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் 4 ஆம் வார ஆடி சிறப்பு பூஜை
தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடி மாதம் 4 ஆம் வார சனிக்கிழமை சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

குச்சனூா் அருள்மிகு சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயிலில் ஆடி மாத 5 வார சனிக்கிழமை சிறப்பு பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதி சனீஸ்வரா் - நீலாதேவி திருக்கல்யாணம் வைபம் சிறப்பு நடைபெற்றது.
4-ஆவது வார சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை முதலே அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காகக் குவிந்தனா். முன்னதாக , கோயில் முன்பாக செல்லும் சுரபி நதியில் நீராடி புத்தாடை அணிந்து, எள் சாதம் படைத்து , தீபமேற்றி, பூமாலை படையலிட்டு சனீஸ்வர பகவானை வழிபட்டனா்.