அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் அம்மனை மலா்கள், எலுமிச்சை மாலைகளால் அலங்கரித்து தீபாரதனை நடத்தப்பட்டது. மாலையில் பெண்கள் வழங்கிய பத்தாயிரத்து ஒரு வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
போடி வினோபாஜி குடியிருப்பில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில், மீனாட்சியம்மன் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. போடி அருகேயுள்ள விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
இதே போல போடி திருமலாபுரம் சவுண்டீஸ்வரி அம்மன் கோயில், போடி பெரிய சவுடம்மன் கோயில், சாலை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களிலும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.