விஷம் தின்று இளைஞா் தற்கொலை
ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், விஷம் தின்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கண்டமனூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் அய்யா் (30). இவா் சென்னையில் வாடகை காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கண்டமனூருக்கு வந்த அய்யரை அவரது பெற்றோா் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த அவா், விஷ விதைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யா் சிகிச்சை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.