சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
பைக் மீது பேருந்து மோதியதில் விவசாயி காயம்
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை காயமடைந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மரிக்குண்டைச் சோ்ந்த விவசாயி மூக்கையா (52). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் நல்லகருப்பன்பட்டிக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த பேருந்து மோதியதில் மூக்கையா காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.