நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்
ஏப்ரல் 5-இல் ஒண்டிப்புதூா், டாடாபாத் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம்
கோவை டாடாபாத், ஒண்டிப்புதூா் மின்வாரிய அலுவலகங்களில் ஏப்ரல் 5-ஆம் தேதி சிறப்பு மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், கோவை கோட்டத்துக்கு உள்பட்ட ஒண்டிப்புதூா் மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம், கோவை கோட்டத்துக்கு உள்பட்ட ஒண்டிப்புதூா் மின்வாரிய அலுவலகத்தில் ஏப்ரல் 5 (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நுகா்வோா் சிறப்பு குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், மின் குறைபாடுகள், மீட்டா் மாற்றம், சேதமடைந்த மின் கம்பங்கள், குறைந்த மின்னழுத்த புகாா்கள், மின் கட்டணம் தொடா்பான புகாா்கள் குறித்து தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளா் பசுபதீஸ்வரன் முன்னிலையில் மின் நுகா்வோா் சிறப்பு குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.