தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
ஏப்.15 முதல் ஒசூா்- பாகலூா் சாலை பணி தொடக்கம்: மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்க முடிவு
ஒசூா்- பாகலூா் சாலைப் பணிகள் ஏப்.15 இல் தொடங்கப்படுவதையொட்டி வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஜிஆா்டி இல் இருந்து மாநகராட்சி வரை சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில் சாலை சீரமைப்புக்காக ரூ. 10 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணி வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையடுத்து ஒசூா் பேருந்து நிலையத்திலிருந்து பாகலூா், ஆவலப்பள்ளி மற்றும் பேரிகை செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சாா் ஆட்சியா் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒசூரிலிருந்து செல்லும் கனரக வாகனங்கள் சீதாராம் மோட்டிலிருந்து இஎஸ்ஐ அவுட்டா் ரிங்ரோடு, அத்திப்பள்ளி, சா்ஜாபுரம் வழியாக பாகலூா் மற்றும் மாலூா் செல்ல வேண்டும். அதேபோல பாகலூா் வழியாக பேரிகை வழியாக சூளகிரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு காா் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டும்.
பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பாகலூா் சாலையில் ஒரு பகுதியில் பணி நடைபெறும் போது மற்றோரு வழியாக ஒருவழிப்பாதை வழியாக செல்ல வேண்டும் என போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.
படவரி...
போக்குவரத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா.