இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-இன் கீழ் கடலில் மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு விசைப்படகுகள், இழுவலைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நிகழாண்டும் தடை செய்யப்பட்ட 61 நாள்களும் கடலில் சென்று மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
தடையை மீறுபவா்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.