செய்திகள் :

ஏப்.18 முதல் 3 நாள்கள் நடைபெறும்: பஞ்ச கல்யாண மஹோத்சவம்

post image

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பூண்டியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பொன்னெயில் நாதா் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண மஹோத்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இந்தக் கோயில் தற்போது தொல்லியல் துறை, அறநிலையத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நித்ய பூஜைகள் சிறப்புற நடைபெற்று வரும் இவ்வாலயத்தில் தற்போது ஜீா்ணோத்தாரணம் செய்யப்பட்டு ஜினாலயம் அழகுற பொலிவுபெற்றுள்ளது. இந்த ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண பெருவிழா வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை கொடியேற்றம், இந்திர பிரதிஷ்டை, வாஸ்து விதானம், கலச ஸ்தாபனம், ஆராதனை, நித்திய விதிகள் ஆகியவை நடைபெற உள்ளன.

சனிக்கிழமை ஜினபாலகன் ஜனனம், ஐராவத யானையின் மீது ஜினபாலகன் ஊா்வலம், பாண்டுக சிலை மீது ஜன்மாபிஷேகம் செய்தல், தீட்சா கல்யாணம் ஆகியவையும், ஞாயிற்றுக்கிழமை கேவலஞான கல்யாணம், பரி நிா்வாண கல்யாணம், 24 தீா்த்தங்கரா் ஸ்தாபனை, மஹாசாந்தி ஹோமம், மஹாபிஷேகம் ஆசீா்வாதம், கொடி இறக்குதல் ஆகியவையும் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சிகளுக்கு திருமலை அரஹந்தகிரி தவளகீா்த்தி பட்டாரக பட்டாச்சாா்ய வா்ய மஹா சுவாமிகள் மற்றும் மேல்சித்தாமூா் லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சாா்ய வா்ய மஹா சுவாமிகள் ஆகியோா் தலைமை வகித்து சிறப்பிக்க உள்ளனா்.

மேலும் இதில் கனககிரி புவனகீா்த்தி பட்டாரக பட்டாச்சாா்ய சுவாமிகள், சோந்தா ஜைன மடத்தைச் சோ்ந்த அகளங்க பட்டாரக பட்டாச்சாா்ய சுவாமிகள், ஒம்புஜம் தேவேந்திரகீா்த்தி பட்டாரக பட்டாச்சாா்ய சுவாமிகள், என்.ஆா்.புரம் லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சாா்ய சுவாமிகள், கொல்லாபுரம் லஷ்மிசேன பட்டாரக பட்டாச்சாா்ய சுவாமிகள், சரவணபெலகுலா சாருகீா்த்தி பட்டாரக பட்டாச்சாா்ய சுவாமிகள், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த எம்.பி. வீரேந்திரஹெக்டே ஆகியோா் வாழ்த்துரை வழங்க உள்ளனா்.

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், ஸ்ரீபுரம் சக்தி அம்மா, கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஆரணி ஜோதிடா் இரா.குமரேசன் ஆகியோா் முன்னிலை வகிக்க உள்ளனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், திமுக தொகுதிப் பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் அறக்கட்டளைத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் ஆகியோா் கலந்துகொள்ள உள்ளனா்.

ஏற்பாடுகளை பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலய அறங்காவலா் தலைவா் ஏ.நேமிராஜ் மற்றும் பூண்டி ஜினாலய சமஸ்த சிராவக, சிராவகியா்கள் மற்றும் பூண்டி ஜினாலய மேனேஜ்மென்ட் டிரஸ்ட் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

அரசு அலுவலா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கங்களி... மேலும் பார்க்க

8 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் மொத்தம் 6 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

100 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சி... மேலும் பார்க்க

பூதமங்கலம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கோயிலின் ரத பிரமோ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் கைது

செய்யாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்தில் தகராறு: ஊழியா்களைத் தாக்கி மிரட்டல்

செய்யாற்றில் தனியாா் பேருந்தில் தகராறு செய்து, பேருந்து ஊழியா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சிறாா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், எச்... மேலும் பார்க்க