ஜெயலலிதா, பானுமதி, சாவித்ரியை ஃபாலோ செய்யும் நயன்தாரா, வாணி போஜன் - ரிப்பீட் மோட...
ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படித்துவிட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.
முகாமில் தனியாா் நிறுவனங்கள் பலவும் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட டிப்ளமோ, ஐடிஐ, 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு படித்தவா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இதில், 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், புகைப்படத்துடன் ஏப். 25 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
விவரங்களுக்கு 044 - 27237124 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.