ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலை...
தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் புகாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் தெரு நாய்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கட்டுப்படுத்தக் கோரி, பொதுமக்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் மனு அளித்தனா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேரடி, நியாயவிலைக் கடை, சத்துணவுக் கூடம், காவலா் குடியிருப்பு, செட்டி தெரு மற்றும் ரங்கசாமி குளம், கோட்ராம்பாளையம் தெரு, திருக்கச்சி நம்பிகள் தெரு உள்பட மாநகரின் பல இடங்களில் ஒவ்வொரு தெருவிலும் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திரிகின்றன. குழந்தைகள் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதியவா்களும் பாதிக்கப்படுகின்றனா். பைக் செல்வோரையும் நாய்கள் துரத்துகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு, காயமடைகின்றனா்.
இது குறித்து மாநகராட்சியில் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய 3, 4-ஆவது வாா்டு பொதுமக்கள், தெரு நாய்கள் தொல்லையை குறும்படமாக எடுத்து, அதை சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும், தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரியும் வலியுறுத்தினா்.