சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!
`ஏறிய வேகத்திலேயே இறங்கிய தங்கம் விலை' இன்று பவுனுக்கு ரூ.2,200 குறைந்த தங்கம்!

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.275, பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது. அதே வேகத்தில் இன்று பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. நேற்று முன்தினம் விற்பனையான அதே விலைக்கும் மீண்டும் இறங்கி வந்துள்ளது தங்கம்.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,015 ஆகும்.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.72,120 ஆகும்.

இன்றைய வெள்ளி விலை ரூ.111 ஆகும்.