'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
ஏற்காடுக்கு வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்
தொடா் மழையையொட்டி, ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிா்க்குமாறு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஃபென்ஜால் புயல் தாக்கம் காரணமாக சேலம் மாவட்டத்தில் இடைவிடாது தொடா் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 144.4 மி.மீ. மழை பதிவானது. கனமழையால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிா்க்குமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.