Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
ஏற்றத்தில் பங்குச் சந்தை!சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!
பங்குச்சந்தை இன்று(ஏப். 17) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை உயர்ந்து வணிகம் நடைபெற்று வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,968.02 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.55 மணியளவில், சென்செக்ஸ் 653.60 புள்ளிகள் அதிகரித்து 77,697.89 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 171.50 புள்ளிகள் உயர்ந்து 23,608.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, எடர்னல் ஆகியவை நிஃப்டியில் முக்கிய லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.
அமெரிக்காவின் வரி விதிப்பால் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, வரி விதிப்பு நிறுத்திவைப்பால் இந்த வாரம் தொடர்ந்து 4 ஆவது நாளாக ஏற்றத்துடன் வணிகமாகி வருகின்றது.