சாம்பியன் டிராபிக்கான அணி தேடல்! அதிரடி காட்டும் நட்சத்திர வீரர்கள்!
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!
வாரத்தின் தொடக்க நாளான இன்று(டிச. 23) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,488.64 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.36 மணியளவில், சென்செக்ஸ் 835.36 புள்ளிகள் அதிகரித்து 78,876.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270.85 புள்ளிகள் அதிகரித்து 23,858.35 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அனைத்து முக்கிய துறைகளும் இன்று ஏற்றம் கண்டு வருகின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்றவை நிதித் துறையில் லாபத்தை ஈட்டியுள்ளன,
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் மற்றும் ஹிண்டால்கோ போன்ற முன்னணி உலோக நிறுவனங்களின் பங்குகள் விலையும் உயர்ந்தது.
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை மிகவும் மோசமான சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | 2022க்குப் பிறகு கடும் சரிவில் பங்குச்சந்தை! ஏன்?