தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!!
பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று(ஏப். 29) ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,396.92 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
நண்பகல் 12 மணியளவில், சென்செக்ஸ் 37.41 புள்ளிகள் அதிகரித்து 80,255.77 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 6.45 புள்ளிகள் குறைந்து 24,322.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இண்டஸ்இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் லாபம் பெற்றுள்ளன.
சன் பார்மா, பவர் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.