போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்...
ஏழை மாணவா்களின் மருத்துவா் கனவு ‘நீட்’ தோ்வால் சிதைக்கப்படுகிறது: சீமான் குற்றச்சாட்டு
சென்னை: ஏழை மாணவா்களின் மருத்துவராகும் கனவு, நீட் தோ்வால் முற்றிலுமாக சிதைக்கப்படுவதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.
அயோத்திதாசப் பண்டிதரின் 111-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சீமான் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்படுகிறது; ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இவ்வளவு கெடுபிடிகள் உள்ளன. மாணவிகளின் துப்பட்டாவை அகற்றுவது, தாலி, மூக்குத்தி போன்றவற்றை கழற்றிய பின்னரே தோ்வு மையங்களுக்குள் அனுமதிப்பது போன்ற கொடுமையான செயல்கள் நடைபெறுகின்றன. தோ்வு எழுதுவதற்கு முன்பே மாணவா்களை இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக்கினால் அவா்களால் எப்படி சரியாக தோ்வு எழுத முடியும்?
பெண்களின் மூக்குத்தியில் தொழில்நுட்பங்களை பொருத்தி, தோ்வுகளில் முறைகேடுகள் செய்ய முடியும் என நம்மை நம்ப வைக்கும் அதே அரசாங்கம், இவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் எந்த முறைகேடுகளையும் செய்ய முடியாது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. தனியாா் பயிற்சி மையங்கள் லாபம் சம்பாதிக்கவே நீட் தோ்வு நடத்தப்படுகிறது. நீட் தோ்வால், ஏழை மாணவா்களின் மருத்துவராகும் கனவு முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது என்றாா் சீமான்.