CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TV...
ஐடிஆர் இணையதளம் முடங்கியதால் பயனர்கள் அவதி!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஒரேநாளில் அதற்கான ஐடிஆர் இணையதளத்தில் பதிவு செய்வதால் அத்தளம் முடங்கியுள்ளது.
மாத சம்பளதாரா்கள், இதர வருவாய்ப் பிரிவினா், ஈட்டிய வருமானத்துக்கு செலுத்திய வரி கணக்கை தாக்கல் செய்ய செப். 15 வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியிருந்தது. நாளைமுதல் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வோருக்கு அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த நிலையில், கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஒரேநாளில் அதற்கான ஐடிஆர் இணையதளத்தில் பதிவு செய்வதால் அத்தளம் முடங்கியுள்ளது. இதையடுத்து, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை நீட்டிக்க கோரிக்கை வலுத்துள்ளது. எக்ஸ் தளத்தில் இந்தக் கோரிக்கை ட்ரெண்டிங்கில் உள்ளது.