ஐபோன் 17 ஏர்: செப்.19 முதல் இந்தியாவில் விற்பனை!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 ஏர் மாடலை அறிமுகப்படுதியுள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்லிம் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.
தனது தயாரிப்புகளில் புதுவித மாடல்களை அளித்துப் புரட்சியை ஏற்படுத்திவரும் ஆப்பிள் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு மெல்லிய ஐபோன் 17 ஏர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபோன் 17 ஏர் இதுவரை இருந்ததிலேயே மிக மெல்லிய ஐபோன் மட்டுமல்ல, உலகின் மிக மெல்லிய ஸ்லாப்-ஸ்டைல் போனாகும். வேறு எந்தவொரு ஆப்பிள் ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் மிகக்குறைந்த தடிமனில் (5.6 மி.மீ) தயாரிக்கப்பட்டுள்ளது. சாங்சங் கேலக்ஸி எட்ஜ் எஸ் 25 ஸ்மார்ட்போனை விட (5.8 மி.மீ) இது குறைவாகும்.
இதன் பின்புறம் செராமிக் ஷீல்ட் உள்ளது. முன்புறம் செராமிக் ஷீல்ட் 2ஐப் பயன்படுத்துகிறது. ஏர் மாடலில் 120 ஹெர்ட்ஸ் வரை ப்ரோமோஷனுடன் கூடிய சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவும் உள்ளது.
இதன் டிஸ்ப்ளே அளவு 6.5 அங்குலங்கள், புதிய மெல்லிய மற்றும் லேசான டைட்டானியம் ப்ரேம் கொண்டுள்ளது. அதனால் கைக்கு அடக்கமாகவும் பயன்படுத்துவதற்கு ஸ்டைலாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ஏர் ஸ்பேஸ் பிளாக், கிளொட் ஒயிட், லைட் கோல்ட், ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விற்பனை செப்.19 முதல் தொடங்குகிறது. இதன் விலை ரூ.1,19,000 ஆகும்.