ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை
திருமருகல் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஐயப்ப சுவாமிக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு செவ்வாய்கிழமை இரவு காா்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்யப்பட்டது, பின்னா் ஐயப்ப சுவாமி சந்நிதி வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் 200-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து கன்னி சாமிகளுக்கு கன்னி பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.