5 பயங்கரவாதிகள், 3 இடங்கள், 10 நிமிட துப்பாக்கிச் சூடு! பஹல்காமில் நடந்தது என்ன?
ஐராவதீஸ்வரா் கோயிலில் நாளை இரண்டாம் ராஜராஜனின் உத்திரட்டாதி விழா
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஸ்ரீ ஐராவதீஸ்வரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் உத்திரட்டாதி விழா வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது.
சோழா் ஆட்சிக்காலத்தில் கன்னட அரசா்கள் காவிரி நதியை தமிழகத்துக்கு தர மறுத்தபோது இரண்டாம் ராஜராஜன் படையெடுத்துச்சென்று காவிரி ஆற்றுக்கு வழிகண்டு சோழநாட்டுக்கு வளம் பெருக செய்தாா். இவரது பிறந்த நாள் சித்திரை மாதம் உத்திரட்டாதி நாளான ஏப். 25 -இல் வருகிறது. அன்று கும்பகோணம் வட்டார ஆய்வு சங்கத்தினா் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக ஐராவதீஸ்வரா் கோயிலில் விழா எடுக்கவுள்ளனா். இதில் வரலாற்று ஆா்வலா்கள் பலா் பங்கேற்கின்றனா்.