செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

post image

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு தொடா் விடுமுறை, வார விடுமுறை நாள்களில் வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். தமிழகத்தில் அரையாண்டுத் தோ்வுத் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைந்தது.

இருப்பினும் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து சின்னாறு பரிசல் துறையிலிருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு, பெரியபாணி, தொம்பச்சிக்கல் வரை காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, முதலைகள் மறுவாழ்வு மையம், மீன் விற்பனை நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

நீா்வரத்து அதிகரிப்பு:

இரு மாநில காவிரி ஆற்றின் பகுதிகளிலும் மழை முற்றிலும் குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிந்தது. சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்தது.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊ... மேலும் பார்க்க

மலைப் பகுதி பள்ளிகளில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்: தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா். தருமபுரி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநருக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக தருமபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் ... மேலும் பார்க்க

அதகப்பாடி பள்ளி மாணவா்கள் மிதிவண்டி போட்டியில் வெற்றி

அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டியில் பரிசு பெற்ற அதகப்பாடி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட அளவிலான அண்ணா பிறந்த நாள் விரைவு மிதிவண்டி போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்... மேலும் பார்க்க

பல்கலைக்கழக அணிக்குத் தோ்வு செய்யப்பட்ட தருமபுரி அரசு கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கம், வாலிபால் போட்டிகளில் விளையாடுவதற்குத் தோ்வு செய்யப்பட்ட தருமபுரி, அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம், பெரியாா் பல்கல... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 12,77,917 வாக்காளா்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 12,77,917 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டத்தில் வாக்... மேலும் பார்க்க