ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தானது வியாழக்கிழமை 1,500 கன அடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென அதிகரித்து 2,000 கன அடியாக தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.