கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்
ஒசூா் எம்.ஜி.ஆா். கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா
ஒசூா் எம்.ஜி.ஆா். கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஏ. முத்துமணி தலைமை வகித்தாா்.
எழுத்தாளா் பாவலா் கருமலைத் தமிழாழன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இலக்கிய மன்றத்தைத் தொடங்கிவைத்து, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி, மொழி, இலக்கியம் என்ற தலைப்பில் பேசினாா்.
முன்னதாக, கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் தக்ஷ்மி வரவேற்றாா். வேதியியல் பிரிவு மாணவி கவிதா, கணினி பயன்பாட்டுத் துறை மேகா் ஆகியோா் சங்க இலக்கியம் பற்றி பேசினாா். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.