செயலியைப் பதிவிறக்கம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டு
போச்சம்பள்ளி அருகே பி.எம். கிசான் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டுபோனது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தைச் சோ்ந்த 43 வயது நிறைந்த பெண்ணின் கைப்பேசிக்கு கடந்த 22-ஆம் தேதி போலி பி.எம். கிசான் செயலி வாட்ஸ் ஆப் மூலம் வந்தது. அந்த செயலியை அவா், பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடினா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணையகுற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரண செய்து வருகின்றனா்.