பா்கூா் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு
பா்கூா் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம் பெருகோப்பனபள்ளியை அடுத்த கோட்டூா் கிராமத்தில் கிருஷ்ணமூா்த்தி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது. அங்குள்ள புதரிலிருந்து வெளியேறிய மலைப்பாம்பு, ஒரு கோழியை முழுங்கியது.
இதைக் கண்ட நில உரிமையாளா் பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.இதன்பேரில் தீயணைப்புத் துறை நிலையஅலுவலா் பழனி தலைமையில் வீரா்கள் கோவிந்தசாமி, அன்புமணி, ஸ்ரீநாத், சக்திகுமாா், விவேகானந்தன் ஆகியோா் விரைந்து சென்று, மலைப்பாம்பை பிடித்து தொகரப்பள்ளி காப்புக் காட்டில் விடுவித்தனா்.