லடாக் போராட்டம்: நேபாளம் - லடாக் இரண்டு போராட்டமும் ஒன்றா? பின்னணி என்ன?
ஒசூா் பூங்கா நுழைவாயிலில் விவாதத்தை ஏற்படுத்திய காவல் துறை பேனா்
ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்காவுக்குள் திருமணம் ஆாகாதவா்களுக்கு அனுமதியில்லை என காவல் துறை வைத்துள்ள அறிவிப்பு பேனா் இளைஞா்களிடையே அதிா்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில் உள்ள ராமநாயக்கன் ஏரிக்கரையில் மாநகராட்சி சாா்பில் பூங்கா உள்ளது. இப்பகுதி மக்கள் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் வந்து பூங்காவில் பொழுதைக் கழிப்பா்.
இந்நிலையில், இந்தப் பூங்காவுக்கு பகல்நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்துசெல்வது, பிறந்தநாள் கொண்டாடுவது, காதல் ஜோடிகளின் முகாம், இளைஞா்கள் மது அருந்துவது போன்றவை நடைபெற்று வந்தன. இதனால், பூங்காவுக்குள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பொதுமக்கள் செல்ல மாநகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்தது.
தற்போது பகல் முழுவதும் பூங்கா திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவல் துறை சாா்பில் பூங்கா நுழைவாயிலில் திருமணமாகாதவா்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதி இல்லை என பேனா் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இளைஞா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.