செய்திகள் :

ஒசூா் வனக்கோட்டத்தில் 225 யானைகள்!

post image

ஒசூா் வனக்கோட்டத்தில் 225 யானைகள் உள்ளன என மாவட்ட வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒசூா் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 45 யானைகள், ஜவளகிரி வனச்சரகத்தில் 70 யானைகள், அஞ்செட்டி வனச்சரகத்தில் 50 யானைகள், ராயக்கோட்டை வனச்சரகத்தில் 15 யானைகள், கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் 11 யானைகள், உரிகம் வனச்சரகத்தில் 25 யானைகள் என மொத்தம் 225 யானைகள் உள்ளன.

யானைகளின் நடமாட்டத்தை வனப் பணியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து அனைத்து வனச்சரகங்களிலும் யானைகள் நடமாட்டமுள்ள கிராமங்களில் தடம் குழுக்கள் மூலம் பொதுமக்கள், விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தியும், குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலமும், ஒலிபெருக்கிகள் மூலமும், தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்திகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் தகவல் கட்டுப்பாட்டு மையம் மற்றும் டிரோன்கள் மூலமும் யானைகளின் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, காப்புக்காடுகளை விட்டு வெளியில் வரும் யானைகளை மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பி பாதுகாப்பு பணியில் வனப் பணியாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நவீன தடுப்பு வேலிகளான இரும்புவட கம்பி வேலி, தொங்கும் வகையிலான சூரிய மின் வேலிகளை பராமரிப்பு பணி மேற்கொண்டும், யானைகள் அடிக்கடி வெளியேறும் முக்கியப் பகுதிகளில் புதிதாக இரும்புவட கம்பி வேலி அமைத்தும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யானைகள் நடமாட்டம் ஏதேனும் தென்படும்பட்சத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரையில் துணை முதல்வா் நிவாரண உதவி

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். ஊத்தங்கரையில் அண்ணா நகா், காமராஜா் நகா... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் சமபந்தி விருந்து

ஒசூா்: ஒசூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரா் கோயிலில் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், குடியிருப்புகள், விளைநிலங்கள், காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன்களுக்கு தீா்வு காணும் வகையில் கடன் தீா்வு தீட்டம் 2023- நடைபெறவுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவ... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய ஊத்தங்கரை

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. பல இடங்களில் வெள்ள நீரில் மின் கம்பங்கள் உடைந்தும் சாய்ந்தும் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே 15 ஆடுகள் பலி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மழை வெள்ளத்தில் 15 ஆடுகள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த பொன்னுரங்கம் சித்ரா தம்பதிக்கு சொந்தமான 15 ஆடுகள்... மேலும் பார்க்க