ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் சமபந்தி விருந்து
ஒசூா்: ஒசூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரா் கோயிலில் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மேயா் எஸ்.ஏ.சத்யா கலந்துகொண்டு சமபந்தி விருந்தைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, துணை மேயா் ஆனந்தய்யா, பகுதி செயலாளா் ராமு, அணிகளின் அமைப்பாளா்கள் சக்திவேல், ராஜா, மகேஷ் பாபு, லோகநாதன், ஹரி பிரசாத், ரத்னசிங், விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளா் ராமமூா்த்தி, துணை அமைப்பாளா்கள் சீனிவாசன், மாரிமகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த சமபந்தி விருந்தில் 500 க்கும் மேற்பட்டோருக்கு விருந்தளிக்கப்பட்டது.
பட வரி...
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்து.