செய்திகள் :

ஒடிஸாவில் மூன்று இடங்களில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு: ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

post image

புவனேசுவரம்: ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா். இதில் ரயில்வே ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.

ஒடிஸா-ஜாா்க்கண்ட் எல்லையில் சுந்தா்கா் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் அப்பகுதியில் செல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

ரயிலைக் கவிழ்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் 3 இடங்களில் தண்டவாளங்களில் வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வைத்துள்ளனா். முதலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி ரயில்வே ஊழியா் எதாவா ஓரம் (37) உயிரிழந்தாா். மற்றொரு ஊழியா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் இருவரும் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனா்.

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரத்திலேயே அதே மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன. இதில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள், காவல் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ‘தியாகிகள் தினத்தை’ அனுசரிக்க மாவோயிஸ்ட் அமைப்பினா் அழைப்பு விடுத்த நிலையில், அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனா்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் நக்ஸல் ஒழிப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த ரயில்வே ஊழியருக்கு ஒடிஸா மாநில அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.1... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையி... மேலும் பார்க்க

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவை ரத்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.குறிப்பிட்ட கால இடைவெளிக்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க