உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!
ஒட்டன்சத்திரம்: எகிறும் எலுமிச்சை பழம் விலை.. காரணம் என்ன?
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் சூட்டைத்தணிக்கும் வகையிலான இளநீர், சர்பத், தர்ப்பூசணிப்பழம், ஜூஸ் வகைகள், பழங்கள் வியாபாரம் களைகட்டியுள்ளது. இதில் சர்பத் மற்றும் ஜூஸ் போடுவதற்காக எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் கோயில் திருவிழா காலமாக இருப்பதால், எலுமிச்சை பழங்களின் தேவை இரட்டிப்பாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார மலைகிராமங்களில் நீலமலைக்கோட்டை பகுதி, தேனி மாவட்ட மலைகிராமங்களில் எலுமிச்சை பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அந்த பழங்கள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு விற்ற எலுமிச்சை தற்போது 120 ரூபாயாக விற்பனையாகிறது.

எலுமிச்சை பழ விளைச்சல் குறைந்து வருகிறது. இந்நிலையில் தேவை இருமடங்கு உயர்ந்துள்ளதால், மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துவிட்டது. வரும்காலங்களில் கிலோ 150 ரூபாய் கூட உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.