செய்திகள் :

ஒன்பது அதானி குழும பங்குகள் சரிவுடன் முடிவு!

post image

புதுதில்லி: லஞ்சம் வழங்கியது குறித்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகார் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பெடரல் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதால், அதானி குழுமத்தின் ஒன்பது பங்குகள் இன்று சரிந்து முடிந்தது.

அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 3.75 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் 1.78 சதவிகிதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 1.36 சதவிகிதமும், ஸங்கி இண்டஸ்ட்ரீஸ் 1.36 சதவிகிதமும், ஏசிசி 0.93 சதவிகிதமும், அதானி வில்மர் 0.90 சதவிகிதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 0.81 சதவிகிதமும், அதானி பவர் 0.47 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் 0.28 சதவிகிதமும் சரிந்தது.

இன்ட்ரா டே வர்த்தகத்தில், அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 4.25 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 4.30 சதவிகிதமும் சரிந்தது. இருப்பினும், என்டிடிவி-யின் பங்குகள் 1.35 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் 0.54 சதவிகிதமும் உயர்ந்தது.

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆனது நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நிக்கோலஸிடம், கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகாரை வழங்குவதற்கான முயற்சிகள் குறித்து தனது நிலையை சமர்ப்பித்தது.

அதே வேளையில், அதானி கிரீன் நிறுவனமானது, செப்டம்பர் 2021 கடன் வழங்கல் தொடர்பாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பொறுப்பற்ற முறையில் தவறான பிரதிநிதித்துவங்களை வழங்கியதன் மூலம் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஃபெடரல் செக்யூரிட்டீஸ் சட்டங்களின் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியுள்ளனர் என்றது.

கடந்த ஆண்டு நவம்பரில், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அசூர் பவர் குளோபல் லிமிடெட் நிர்வாகி சிரில் கபானெஸ் ஆகியோர் மீது லஞ்சத் திட்டத்திலிருந்து எழும் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டியது.

நீதித்துறை மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ள நிலையில் அவற்றை மறுத்துள்ளது.

இதையும் படிக்க: 5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்ட ஹெக்சாவேர் டெக் பங்குகள்!

இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 13.88 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மா... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவடைந்தது. தொடர்ச்சியாக அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய குறியீட்டில் மீட்சி ஆகியவற்றால் இது வெக... மேலும் பார்க்க

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 420 புள்ளிகளும், நிஃப்டி 22,800 புள்ளிகளுக்கு கீழே முடிவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான அமெரிக்க சந்தைகள் மற்றும் கட்டண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வாரத்தின் கடைசி நாளான இன்று பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்... மேலும் பார்க்க

வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகித்தைக் குறைப்பதாக ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 20% உயா்வு

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவன... மேலும் பார்க்க

9% சரிந்த பிண்ணாக்கு ஏற்றுமதி

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 9 சதவீதம் சரிந்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் ராப்சீட் பிணணாக்கு, ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாகக் குற... மேலும் பார்க்க