இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
ஒப்பிலியப்பன் கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் சனிக்கிழமை விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அன்னதான திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை விரிவு படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்பேரில் ஒப்பிலியப்பன் கோயிலில் ஏற்கெனவே 150 பேருக்கு அன்னதானம் வழங்குவதை 200 பயனாளிகளாகவும், மேலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகள் உள்ளிட்ட சிறப்பு நாள்களில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான நிகழ்வை அறங்காவலா் குழு தலைவா் மு.மோகன் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் இணை ஆணையா் ஞா. ஹம்சன், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் பொதுமக்கள் உள்ளிட்டடோா் கலந்து கொண்டனா்.