செய்திகள் :

ஒருநாள் தரவரிசையில் ரோஹித் 2-ஆவது இடம்..! டாப் 10-இல் 4 இந்தியர்கள்!

post image

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் சர்மா (38 வயது) டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

ரோஹித் சர்மா மீதமிருக்கும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, 2027 உலகக் கோப்பையை வெல்ல கனவோடு இருக்கிறார்.

சமீபத்தில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கினார்.

இந்நிலையில், ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாபர் அஸாம் மோசமாக விளையாடியதன் விளைவாக அவரது புள்ளிகள் குறைந்ததால் ரோஹித் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்தியாவின் ஷுப்மன் கில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். 8ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் இருக்கிறார். மொத்தமாக டாப் 10-இல் இந்தியர்கள் இருக்கிறார்கள்.

ஐசிசி ஒருநாள் தரவரிசை

1. ஷுப்மன் கில் - 784 புள்ளிகள்

2. ரோஹித் சர்மா - 756 புள்ளிகள்

3. பாபர் அஸாம் - 751 புள்ளிகள்

4. விராட் கோலி - 736 புள்ளிகள்

5. டேரில் மிட்செல் - 720 புள்ளிகள்

Indian ODI captain Rohit Sharma has moved up to second place in the ICC rankings.

டி20 உலகக் கோப்பை: பவர்பிளேவில் பந்துவீச தயாராகும் மேக்ஸ்வெல்!

டி20 உலகக் கோப்பை 2026-இல் பவர்பிளேவில் பந்துவீச மேக்ஸ்வெல் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ளென் மேக்ஸ்வெல் (36 வயது) சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆல... மேலும் பார்க்க

தி ஹன்ட்ரட்: கடைசி பந்தில் சிக்ஸர்... வைரலாகும் விடியோ!

தி ஹன்ட்ரட் லீக்கில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவையான நிலையில் சிக்ஸர் அடித்து அசத்திய கிரஹாம் க்ளார்க் விடியோ வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்! மணப்பெண் யார்!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்துவோம்: ஸ்காட் போலாண்ட்

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

பேபி ஏபிடியா? அசலான டெவால்டு பிரெவிஸாக இருக்க சபதம்!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தான் அசலான பிரெவிஸாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்கள் இவரை ’பேபி ஏபிடி’ என அழைகிறார்கள். முன்னாள் தெ.ஆ. வீரர் ஏபிடியைப் போலவே... மேலும் பார்க்க

கௌதம் கம்பீர் என்னிடம் எப்போதும் கூறுவது என்ன தெரியுமா? மனம் திறந்த ஆகாஷ் தீப்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மனம் திறந்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி... மேலும் பார்க்க