முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?: எல்...
ஒரு சித்தப்பாவாக என் மகன் சிவராஜ்குமாரை வாழ்த்துகிறேன்: கமல் ஹாசன்
நடிகர் கமல் ஹாசன் நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்தியுள்ள விடியோ ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் தீவிரமான நட்சத்திர ரசிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். மிக இளவயதிலிருந்தே கமல் மீது பெரிய அன்புகொண்டவர்.
அவருடைய படங்களையும் தோற்றத்தையும் பலமுறை வியந்து குறிப்பிட்ட சிவராஜ்குமார், ஒருமுறை கமல் தன்னைத் தொட்டதால் மூன்று நாள்கள் குளிக்கவில்லை என்பதையும் தெரிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில், கன்னட சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த சிவராஜ்குமாரை வாழ்த்தும் விதமாக கமல் ஹாசன் தரப்பிலிருந்து விடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில் பேசிய கமல் ஹாசன், “நடிகர் சிவராஜ்குமார் எனக்கு மகன் மாதிரி. நான் அவருக்கு சித்தப்பா போல. ராஜ்குமார் அண்ணன் காட்டிய அன்பு எதிர்பாராதது. காரணம், நாங்களெல்லாம் ஒரே ஸ்டூடியோவில் வளர்ந்த பிள்ளைகள். அன்று துவங்கிய உறவு, அவருக்குப் பின்பும் தொடர்ந்து வருகிறது. சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்தது சிவண்ணாவுக்கு (சிவராஜ்குமார்) எப்படி இருந்தது எனத் தெரியவில்லை.
#DINAMANI | "என் மகன் மாதிரி” திரைத்துறையில் 40 ஆண்டுகள்: Shiva Rajkumar-க்கு Kamal Haasan வாழ்த்து#ShivaRajkumar#KamalHaasan#Kollywood#Sandalwood#CinemaUpdates#TamilCinema#KannadaCinema#CelebrityNews#FilmIndustrypic.twitter.com/P4lVOdsD4v
— தினமணி (@DinamaniDaily) June 11, 2025
ஆனால், அவர் என்னை முதன்முதலில் என் ரசிகராகச் சந்தித்தார். அன்றிலிருந்து தன் தந்தையின் வழியில் கடுமையாக முயற்சித்து இன்று மாபெரும் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். சிவண்ணா உங்களின் 50 ஆம் ஆண்டிலும் நான் இருப்பேன். என் அன்பு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: லோகேஷ் உடனான படம் எப்போது ஆரம்பம்? அமீர் கான் பதில்!