செய்திகள் :

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அரசு அல்லது விமானப் படை தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், எரிக் டிராப்பியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலின்போது, மூன்று ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஃபேல் போா் விமானங்களை தயாரிக்கும் பிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் நிறுவன சிஇஓ எரிக் டிராப்பியா் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

சீனாவின் ஜெட் விமானங்கள் மீதான உலக நாடுகளின் நன்மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில், ரஃபேல் விமானங்களின் திறன் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்படுவதாகவும் டிராப்பியர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமானத்தின் தோல்வியானது, 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதில் எதிரிகளின் ஈடுபாடோ அல்லது விரோதமான ரேடார் தொடர்புகளோ இல்லை எனவும் பிரெஞ்சு இணையதள செய்தி நிறுவனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டி டிராப்பியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பின்னணியில் சீனா?

பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான ரஃபேல் போர் விமானங்களின் உலகளாவிய நற்பெயரையும், விற்பனையையும் சிதைக்க திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பும் முயற்சியில் சீனா ஈடுபட்டதாக பிரான்ஸ் ராணுவம் மற்றும் உளவுத்துறை கூறுகிறது.

உலக நாடுகள் ரஃபேல் விமானங்களை வாங்குவதைத் தடுக்கவும், அதற்குப் பதிலாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை வாங்குவதை ஊக்குவிக்கவும் சீனா இப்படி செய்ததாக, பிரான்ஸ் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவிட்டது: எக்ஸ்

One IAF Rafale lost, but not shot by Pakistan says Dassault CEO Eric Trappier 

பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பழமை வாய்ந்த வெல்விட்சியா மிரபலீஸ் விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது.உ... மேலும் பார்க்க

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க