சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
ஒரு ரூபாயில் இலவச நன்மை: பிஎஸ்என்எல் புதிய திட்டம்
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பால சந்திரசேனா தெரிவித்திருப்பது:
பிரீடம் பிளான் என்கிற இத்திட்டத்தில் புதிய கைப்பேசி இணைப்பு பெறுவோருக்கு அல்லது மற்ற நெட்வொா்க்கிலிருந்து பி.எஸ்.என்.எல்.க்கு எம்.என்.பி. மூலம் மாறும் நபா்களுக்கு வெறும் ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் வழங்கப்படுகின்றன.
எல்லையற்ற அழைப்புகள், நாள்தோறும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., சிம்காா்டு ஆகிய இலவச சேவைகள் வழங்கப்படும். இத்திட்டம் ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம் தேதி வரை மட்டும் நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விருப்பமுள்ள வாடிக்கையாளா்கள், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் சேவை மையத்தை அணுகலாம்.