செய்திகள் :

ஒரே அம்பு, இரு இலக்குகள்! மோடிக்கு மட்டும் 75 வயது ஆகவில்லை! - ஜெயராம் ரமேஷ்

post image

பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியது பற்றி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகிற செப்டம்பர் மாதத்துடன் 75 வயது பூர்த்தியாகிறது. அவரை மறைமுகமாகக் குறிப்பிட்டுதான் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

"விருது பெற்ற ஏழை பிரதமர்! செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது என்பதை மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாக நினைவுபடுத்தியுள்ளார்!

ஆனால், பிரதமரும் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் சொல்லலாம். உங்களுக்கும்(மோகன் பகவத்) வருகிற செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதாகிறது என்று!

ஒரே அம்பு, இரு இலக்குகள்!" என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

Congress Jairam Ramesh takes dig at PM Modi after RSS chief retirement age remarks

75 வயதில் ஓய்வுபெற வேண்டும்! பிரதமர் மோடியைச் சொல்கிறாரா ஆர்எஸ்எஸ் தலைவர்?

ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குக்கு ஏற்பட்டபிறகு, முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க