செய்திகள் :

ஒரே நாளில் 2 முறை விலையுயர்ந்த தங்கம்: மக்கள் அதிர்ச்சி!

post image

ஆபரணத் தங்கம் விலை நேற்று போல் இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த இரு நாள்களாக வர்த்தகம் தொடங்கி காலை, மாலை என இரண்டு முறை தங்கம் விலையுயர்ந்து வருகின்றது.

சென்னையில் கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 2,800 விலையுயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் இன்று காலை ரூ. 560 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,120 உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,680 விலை உயர்ந்துள்ளது.

அதேபோன்று தங்கம் ஒரு கிராம் இன்று காலை ரூ. 70 உயர்ந்த நிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது மேலும் கிராமுக்கு ரூ. 140 உயர்ந்துள்ளது.

அதன்படி, தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 10.640-க்கும், சவரனுக்கு ரூ. 85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியும் ரூ. 1 உயர்ந்து கிராமுக்கு ரூ. 150-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,50,000 ஆகவும் விற்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என நகைமதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றன.

The price of gold jewelry has risen twice in a single day, just like yesterday, causing shock among the public.

இதையும் படிக்க:செப்.25 முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: அமெரிக்க எச்-1பி விசா கட்டணங்கள் கடுமையாக உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில், ஐடி மற்றும் ப்ளூ-சிப் தனியார் வங்கி பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததாலும், அதே வேளையில் அந்நிய நிதி வெளியேற்றம்... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் குழுவில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிவிடப்படும் தகவல்களை தவறவிடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய சோதனையில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது. இதன்படி, அனைவரையும் குறிப்பிட்டுப் பதிவிடப்படும் வாட... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?

இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பால் வேளாண்மை, எரிசக்தி, ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என்று ... மேலும் பார்க்க

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தகம்!

புதுதில்லி: தீபாவளி பண்டிகையைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தக நடைபெறும் என்று தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) தெரிவித்துள்ளது. வர்த்தகமானது மதியம் 1:45 மணி தொடங்கி 2... மேலும் பார்க்க

சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு, ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது, மே மாதத்தில் 229 கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து, ஆகஸ்ட் மாதம் 9.648 கோடி அமெரிக்க டாலராக, அதாவது 58 சதவிகிதம்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31ஆக நிறைவு!

மும்பை: டிரம்பின் எச்1பி விசா கட்டண உயர்வு, இந்தியர்களின் பணப் பரிமாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31 ஆக நிறைவடைந்தது. வங்... மேலும் பார்க்க