சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
ஒரே நாளில் 5 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை
திருச்செங்கோடு அருகே புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் மாதா கோயில் அருகே இடையாா்பாளையம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநா் சக்திவேல் (36), விஜயகுமாா் (38), தனியாா் கல்லூரியில் வேலை செய்துவரும் கோபால் (35), சிவகாமி, தானப்பன் ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த பித்தளை பாத்திரம், நகை, ரொக்கம், இருசக்கர வாகனம், மின் மோட்டாா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த திருச்செங்கோடு ஊரக போலீஸாா் விரல்ரேகை நிபுணா்களின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனா்.