செய்திகள் :

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

post image

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பை முடித்து பிளஸ் 1 பயிலும் மாணவிகள் இணையதளத்தில் அக். 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிபெறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும். பெண் குழந்தைகளிடம் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டார் ராகுல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.தென் அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் ... மேலும் பார்க்க

அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியின் பதவிக் காலம் நீட்டிப்பு

இந்திய அட்டா்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா்) ஆா்.வெங்கடரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு அட்டா்னி ஜெனரலாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க