திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்வலி கிழங்கு விதைகளை விற்கலாம்
கண்வலி கிழங்கு விதைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, கரூா் மாவட்டத்தில் செங்காந்தள் மலரின் விதையான கண்வலிக் கிழங்கு விதையை விற்பனை செய்ய கரூா், குளித்தலை, இரும்பூதிப்பட்டி மற்றும் சின்னதாராபுரம் ஆகிய 4 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண்வலிக் கிழங்கு விதை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்று பயன்பெறலாம்.