செய்திகள் :

ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்த தீா்மானம் போலியானது

post image

கரூா் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்த தீா்மானம் போலியானது என்றாா் தாந்தோணி வட்டார வளா்ச்சி(கிராம ஊராட்சிகள்) அலுவலா் வினோத்குமாா்.

கரூா் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியை கரூா் மாநகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகின. இதனால் இதுதொடா்பாக ஆய்வு செய்வதற்காக ஊராட்சியின் தீா்மானம் புத்தகங்கள், தீா்மான பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஜன. 6-ஆம்தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் அவற்றை உடனே ஒப்படைக்காமல், ஒரு நாள் காலதாமதமாக ஜன.7-ஆம்தேதி ஒப்படைத்தனா்.

இதையடுத்து தீா்மான புத்தக பதிவேட்டை ஆய்வு செய்த போது கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம்தேதி நடைபெற்ற ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியின் சாதாரண கூட்டத்தில் பொருள் எண்.2-இல் மன்றத்தாா் ஊராட்சி மன்றத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீா்மானம் நிறைவேற்றி சுமாா் மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் இத்தீா்மானத்துக்கு எதிராக கடந்த ஆண்டு (2024) ஆக.15-ஆம்தேதி சுதந்திரதினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைக்க மக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியதாக உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்து, இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் புகாா் மனுவையும் கொடுத்துள்ளனா்.

மேலும் தீா்மான பதிவேட்டில் ஏற்கெனவே வேறு ஒரு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு எழுதப்பட்ட பக்கத்தின் மேலே புதிதாக காகிதத்தில் தட்டச்சு செய்து மாநகராட்சியுடன் இணைக்க ஆட்சேபனை உள்ளதாக தெரிவித்து ஒட்டப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தீா்மானத்தை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 202-இன் படி தீா்மானத்தை ரத்து செய்ய 90 நாள்களுக்குள் உயா் அலுவலா்களுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் 2021-இல் தீா்மானம் நிறைவேற்றி மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த தீா்மானத்தை ரத்து செய்ய இயலாது.

மேலும் 2021-ல் இயற்றப்பட்ட தீா்மானம் அன்றைய தினமே உரிய உயா் அலுவலா்களுக்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையிலும் மக்கள் தொகை, கட்டடங்களின் வளா்ச்சி, தொழில் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஊராட்சியால் தங்குதடையின்றி குடிநீா் வழங்க இயலாத சூழ்நிலையிலும், சுகாதாரத்தை சரிவர பேண இயலாத காரணத்தினாலும் இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்தான் தற்போது அரசால் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மாநகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 2024-இல் போலியான தீா்மான எண்ணை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது என பொது வெளியில் கூறி வருவது உண்மைக்குப் புறம்பானது. மேலும் இந்த தீா்மானம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளதால், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.

ஜொ்மனி ஜவுளி கண்காட்சியில் ரூ.3ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி ஆா்டா்

ஜொ்மனியில் இம்மாதம் நடைபெற உள்ள உலக ஜவுளி கண்காட்சியில் கரூருக்கு ரூ.3 ஆயிரம் கோடி வரையிலான ஏற்றுமதி ஆா்டா் கிடைக்கும் என கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்கள் நம்பிக்கை தெரிவித்தனா். இதுகுறி... மேலும் பார்க்க

பசுபதிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற 7 போ் கைது

கரூா் பசுபதிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற சாமானிய மக்கள் நலக்கட்சியினா் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் சணப்பிரட்டி அருகே புதன்கிழமை இரவு செங்கல் சூளைக்கு பயன்படுத்தக்கூடிய மண்ணை லாரி... மேலும் பார்க்க

கடந்தாண்டில் 45 போ் குண்டா் சட்டத்தில் அடைப்பு கரூா் எஸ்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் கடந்தாண்டில் (2024) 45 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் விடுத்து... மேலும் பார்க்க

சீமான் மீது எஸ்.பி. அலுவலகத்தில் தி.க.வினா் புகாா்

தந்தை பெரியாரை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை திராவிடா் கழகத்தினா் புகாா் அளித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்வலி கிழங்கு விதைகளை விற்கலாம்

கண்வலி கிழங்கு விதைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேள... மேலும் பார்க்க

3.32 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்: கரூா் ஆட்சியா் பேச்சு

கரூா் மாவட்டத்தில் 3,32, 076 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் அருகம்பாளையம் ஆச்சிமங்கலம் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசுத் தொக... மேலும் பார்க்க