அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
3.32 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்: கரூா் ஆட்சியா் பேச்சு
கரூா் மாவட்டத்தில் 3,32, 076 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
கரூா் அருகம்பாளையம் ஆச்சிமங்கலம் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, மாவட்டத்தில் தகுதியுள்ள 3,32,076 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் நம்பா் மற்றும் குறிப்பிட்ட தேதியில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், ஆணையா் சுதா, துணை மேயா் சரவணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் ஆறுமுகம், அருள்மொழி, பிச்சைவேலு, வட்டாட்சியா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.