ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
சீமான் மீது எஸ்.பி. அலுவலகத்தில் தி.க.வினா் புகாா்
தந்தை பெரியாரை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை திராவிடா் கழகத்தினா் புகாா் அளித்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ஆசிரியா் குமாரசாமி, செயலாளா் காளிமுத்து ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் வழங்கிய மனுவில், தந்தை பெரியாரை அவதூறாக பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.
அப்போது, தி.க. மாவட்டக் காப்பாளா் வே. ராஜூ, மாநில இளைஞரணி துணை செயலாளா் ம. ஜெகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.