கடந்தாண்டில் 45 போ் குண்டா் சட்டத்தில் அடைப்பு கரூா் எஸ்.பி. தகவல்
கரூா் மாவட்டத்தில் கடந்தாண்டில் (2024) 45 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மது விலக்கு, போதை பொருள், குற்ற சம்பவம், சட்டம் ஒழுங்கு, மணல் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 45 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், சைபா் கிரைம் குற்றங்கள் தொடா்பாக பெறப்பட்ட 1,381 புகாா்கள் மீது 22 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.
அவற்றில் மொத்தம் ரூ.11கோடியே 83 லட்சத்து 23 ஆயிரத்து 167 மீட்கப்பட்டுள்ளது. மேலும் குற்றத்தில் சம்மந்தப்பட்டவா்களின் 572 வங்கிக் கணக்குகளும், அதில் இருந்த பணம் ரூ.7கோடியே 89லட்சத்து 70ஆயிரத்து 853 முடக்கப்பட்டுள்ளது. இந்த சைபா் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பொதுமக்கள் சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உதவி எண் 1930 அல்லது இணையதளம் மூலமும் புகாா் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.