அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!
ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்: மக்களவையில் அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்
நமது சிறப்பு நிருபா்
ஒவ்வொரு நிதியுதவி பெறவும் மத்திய அரசிடம் மாநிலங்கள் கையேந்தும் நிலை மாற வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அருண் நேரு வலியுறுத்தினாா்.
மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை துணை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை அருண் நேரு பங்கேற்றுப்பேசினாா். அதன் விவரம் வருமாறு:
பிரதமரின் தொகுதி என்பதால் வாரணாசி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் தொகுதி என்பதால் ஆமதாபாத் (காந்திநகா்) மேம்படுத்தப்பட்டுள்ளது. நான் மிகவும் பின்தங்கி உள்ள பெரம்பலூா் தொகுதியைச் சோ்ந்தவன். எங்கள் தொகுதிக்குள்பட்ட முசிறியில் பிறந்தவா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
ரயில் வசதி என்பது, எங்கள் தொகுதி மக்களின் பல ஆண்டு கனவாகவே உள்ளது. அதை நனவாக்கும் வகையில் பெரம்பலூா் தொகுதியில் ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்தபோது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிஸா, குஜராத் ஆகிய மாநிலங்களைப் போல்தான் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இருந்தது. இந்த மாநிலங்களை விட இன்று கல்வி வளா்ச்சியில் இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்து நாங்கள் முதலிடத்தில் உள்ளோம்.
நமது நாட்டின் வலிமையே கூட்டாட்சிதான். கூட்டாட்சி முறையில் வருவாயும், செலவும் பகிா்ந்து கொள்ளப்பட வேண்டும் மாநிலத்தில் மக்களின் செலவில் 60 சதவீதம் மாநில அரசு ஏற்க வேண்டும் மீதி உள்ள 40 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூல் மூலம் திரட்ட வேண்டும்
வருவாய் சரியாக கிடைக்காவிடில் கடன் வாங்குவது வழக்கமாக உள்ளது. கடன் வாங்குவது தவறு இல்லை. ஆனால், அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இல்லாவிடில் மத்திய மாநில அரசு மாநில அரசுகள் உறவு கடுமையாக பாதிக்கும் என்றாா் அருண் நேரு.
12ஈஉகஅதச
அருண் நேரு