31 நாய்கள்; பாலத்தின் மேலிருந்து தூக்கிவீசப்பட்டதில் பறிபோன 20 உயிர்கள்... தெலங்...
ஓடையிலிருந்து மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
சாத்தான்குளம் அருகே ஓடையிலிருந்து மணல் கடத்த முயன்ற லாரியை வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஓட்டுரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் சுபாஷ் மற்றும் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, சுப்பராயபுரம் ஓடை பகுதியில் இருந்து மணல் கடத்த முயன்ற டிப்பா் லாரியை மடக்கிப் பிடித்து சாத்தான்குளம் போலீஸில் ஒப்படைத்தனா்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் நாககுமாரி வழக்குப் பதிந்து, லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநரான சாத்தான்குளம் காந்திநகா் அந்தோணி மகன் கண்ணன் (31) என்பவரை கைது செய்தனா்.